1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 3 செப்டம்பர் 2018 (08:07 IST)

அதிமுக மீதான கண் திருஷ்டியே முக்கொம்பு அணை உடையக் காரணம் - அதிமுக அமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு

அதிமுக  மீதான கண் திருஷ்டியே முக்கொம்பு அணை உடையக் காரணம் - அதிமுக அமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு
கண் திருஷ்டியாலதான் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்தது என அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியது கேலிக்கு ஆளாகியுள்ளது.
பொது இடங்களில் எப்படி பேசுவது என்று தெரியாமல் காமெடியாக பேசி தொடர்ந்து கேலிக்கு ஆளாகுவது அதிமுக அமைச்சர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. இதில் முதலமைச்சர் எடப்பாடியாரும் அடங்குவார்.
 
சமீபத்தில் திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு, பருவமாற்றத்திற்கு மனிதர்களுக்கு காய்ச்சல் ஏற்படுவது போல வெள்ளப்பெருக்கால் அணைக்கு காய்ச்சல் ஏற்பட்டு அதன் மதகுகள் உடைந்துவிட்டது என கூறினார். அணை உடைந்ததற்கு அற்புதமான விளக்கத்தை அளித்த எடப்பாடி பழனிசாமிக்கு ‘டாக்டர் பட்டம்’ தான் வழங்க வேண்டும் என எடப்பாடியாரை பலர் விமர்சனம் செய்தனர். 
அதிமுக  மீதான கண் திருஷ்டியே முக்கொம்பு அணை உடையக் காரணம் - அதிமுக அமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு
இதற்கு அடுத்தபடியாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூட்டம் ஒன்றில் பேசியபோது எடப்பாடி பழனிசாமி அரசு மீது பட்ட கண் திருஷ்டியால் தான் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்துவிட்டது என கூறினார். இவரது கண்டுபிடிப்பை பலர் கிண்டலடித்து வருகின்றனர்.
 
சைண்டிஸ்ட் செல்லூர் ராஜூ அண்ணனையே நீங்க மீறிட்டீங்கன்னேன்னு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.