புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 டிசம்பர் 2020 (09:49 IST)

எடப்பாடியார் ஊர்ந்து வளர்ந்தவர்; அப்பா ஸ்டைலை பின்பற்றும் உதயநிதி!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சுற்றுபயண பிரச்சாரம் மேற்கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவினர் இப்போதிருந்தே தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று திருவாரூரில் நடைபெற்று வரும் பிரச்சார கூட்டத்தில் பேசிட அவர் “முதல்வர் எடப்பாடி பழனிசாமி படிப்படியாக வளர்ந்தவர் அல்ல; ஊர்ந்து ஊர்ந்து வளர்ந்தவர்” என்று பேசியுள்ளார். முதல்வர் பழனிசாமியை பல மேடைகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இவ்வாறான வார்த்தைகளை கொண்டுதான் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் உதயநிதியும் இதே பார்முலாவை கையில் எடுத்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்து வரும் அதிமுக வட்டாரம் “அவர்களால் எடப்பாடியாரின் ஆட்சியில் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாததால் தொடர்ந்து அவர் அடையாளத்தை கலங்கப்படுத்தும் விதமாக பேசுகின்றனர்” என கூறி வருகின்றனர்.