1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (18:26 IST)

பிரதமரின் வருகையால் சென்னையில் போக்குவரத்தில் மாற்றமா?

modi
பிரதமர் மோடி சென்னைக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வர இருப்பதை அடுத்து சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுமா என்பது குறித்த கேள்விக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை பதிலளித்துள்ளது. 
 
செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வர இருக்கிறார். வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி சென்னையில் இருப்பதையொட்டி 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் விமான நிலையம் நேரு விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் பிரதமர் வருகை காரணமாக சென்னையில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஏற்கனவே உள்ள போக்குவரத்து தொடரும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது