ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (12:01 IST)

Fact Check: வணக்கம் சொல்லாமல் அவமதித்தாரா பிரதமர் மோடி?? – வெளியான முழு வீடியோ!

PM Modi
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவருக்கு வணக்கம் சொல்லாமல் அவமதித்ததாக வீடியோ வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த கடந்த 5 ஆண்டுகளாக பதவி வகித்த நிலையில் இன்றுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பதவியேற்ற நிலையில், நாடாளுமன்றத்தில் ராம்நாத் கோவிந்த் விடைபெறும் நிகழ்வும் நடைபெற்றது.

அப்போது ராம்நாத் கோவிந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கைக்கூப்பி வணக்கம் செய்தபடி சென்றார் அப்போது பிரதமர் மோடி அவருக்கு வணக்கம் செலுத்தாமல் நிற்பதாக அந்த வீடியோவை எதிர்கட்சியை சேர்ந்த சிலர் பதிவிட்டு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அது வெட்டப்பட்ட காட்சி என்று முழுமையான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் ராம்நாத் கோவிந்த தூரத்தில் வணக்கம் செலுத்திக் கொண்டு வரும்போதே பிரதமர் மோடியும் வணக்கம் செலுத்தியபடி நிற்கிறார். பின்னர் புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுக்கும்போது தற்செயலாக கையை கீழே இறக்கியுள்ளார். இந்த முழு வீடியோ குடியரசு தலைவர் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.