இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரதமர் டுவிட்
சென்னையில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க இருப்பதை அடுத்து பிரதமர் மோடி இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்னை வருகிறார்.
இதனை அடுத்து அவர் தனது டுவிட்டரில் சென்னையில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடக்க விழாவில் கலந்து கொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என்றும் இது ஒரு சிறப்புமிக்க தொடர் என்றும் இது இந்தியாவில் நடைபெறுவது நமக்கு பெருமை என்றும் கூறியுள்ளார். மேலும் செஸ் விளையாட்டில் சிறப்புமிக்க தமிழகத்தில் நடப்பது இன்னும் பெருமை என்று அவர் கூறியுள்ளார்
இந்த நிலையில் செஸ் போட்டியை தொடங்கி வைக்க சென்னைக்கு பிரதமர் வருகையை அடுத்து சென்னை நகரில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய செஸ் ஒலிம்பியாட் போட்டியின்ப் தொடக்க விழாவில் பிரதமர் மோடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது