1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. PM Modi discuss with CM Stalin about corona

கொரோனா 3வது அலை: தமிழக முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை!

பிரதமர்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இதனை அடுத்து மூன்றாவது அலை மிக விரைவில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் மூன்றாவது அலையின் தாக்கம் குறித்தும் மூன்றாவது அலை ஏற்பட்டால் அதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்தும் பிரதமர் மோடி நாளை மறுநாள் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார் 
 
ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்கள் உள்ள எட்டு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்த பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் கேரளா உள்பட ஒரு சில மாநில முதல்வருடன் ஆலோசனை செய்ய உள்ளார். நாடு முழுவதும் மூன்றாவது அலை தடுப்பு நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது
 
தமிழகம் கேரளா ஆந்திரா தெலங்கானா உள்ளிட்ட தென் மாநில முதல்வர்களுடன் நாளை மறுநாள் பிரதமர் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
அடுத்த கட்டுரையில்
3ஆம் அலைக்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டது: நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்