திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (18:09 IST)

மீண்டும் அதிகரிக்கும் கொரொனா - பிரதமர் மோடி கவலை

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் கடந்தாண்டு கொரொனா வைரஸ் முதன் முதலாகப் பரவியது.

இங்கிருந்து இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்திற்கு வந்த  மாணவிக்கு முதன் முதலில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இவர் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் இத்தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

தற்போது,  கோவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் முதன்முதலில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட கேரள மாணவிக்கு மீண்டும் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரொனா தொற்றுக் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் கொரொனா தொற்று பரவி வருவது கவலை அளிக்கிறது எனவும் பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து  கொரொனாவுக்கு எதிரான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.