செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (18:15 IST)

மாணவரின் கையில் அடிபட்டதை அக்கறையும் விசாரித்த பிரதமர் மோடி: பட்டமளிப்பு விழாவில் நடந்த சம்பவம்

Modi
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டார் என்பதும் பட்டம் வென்ற மாணவர்களுக்கு அவர் பட்டம் அளித்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் மாணவர் ஒருவர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பிரதமரிடம் பட்டம் பெற வந்த போது அவரது கை விரலில் அடிபட்டு இருந்ததை கவனித்த பிரதமர் மோடி இது என்ன என்று கேட்க அதற்கு அந்த மாணவன் லேசாக அடிபட்டு விட்டது என்று கூற உடனே பிரதமர் மோடி கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்
 
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது, இந்த சம்பவம் குறித்து அந்த மாணவர் பேட்டி அளித்த போது பிரதமர் மோடி அவர்களின் கையால் பட்டம் பெற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது என்றும் எனது கைவிரல்கள் காயம் பட்டதை அடுத்து அதுகுறித்து அவர் அக்கறையுடன் விசாரித்தார் என்றும் கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார் என்றும் கூறினார்