திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (20:53 IST)

பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு..! காரணம் தெரியுமா..?

Modi Mamthaa meet
கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேசினார்.
 
மேற்கு வங்கத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி,  ஹூக்ளியில் உள்ள அரம்பாக் பகுதியில் ரூ.7,200 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு  அர்ப்பணித்து திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து  நாடியா மாவட்டத்திலும் பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
 
இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள பிரதமர் மோடியை,  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சந்தித்து பேசினார். நெறிமுறைப்படி இந்த சந்திப்பு நடைபெற்றது. 

 
முன்னதாக கடந்தாண்டு டிசம்பரில், மம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து மாநிலத்தின் நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தினார். மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு ரூ.1.18 லட்சம் கோடி பாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.