1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. PM candidate is Modi or Edappadi? poster in sivaganga

அடுத்த பிரதமர் மோடியா? எடப்பாடியா? அதிமுகவினரின் அட்ராசிட்டி போஸ்டர்..!

மோடி
அடுத்த பிரதமர் மோடியா? அல்லது எடப்பாடியா? என அதிமுக வினர் சிவகங்கையில் போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மோடியா? லேடியா? என ஜெயலலிதா முழக்கத்துடன் அதிமுகவினர் பிரச்சாரம் செய்த நிலையில் இந்த தேர்தலில் மோடியா? தீதியா? என மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் சமீபத்தில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய அதிமுக தற்போது திடீரென மோடியா? எடப்பாடியா? யார் பிரதமர் வேட்பாளர்? என போஸ்டர் அடித்து சிவகங்கை நகர் முழுவதும் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
தமிழர் உரிமையை காக்க, தமிழகம் காக்க, பாரத பிரதமராக எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என்றும் எனவே இரட்டை இலையை சின்னத்தில் சிந்தித்து வாக்களிப்பீர் என்றும் அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது 
 
 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கடும் தண்ணீர் பஞ்சம் எதிரொலி: வொர்க் ப்ரம் ஹோம் கேட்கும் பெங்களூரு ஊழியர்கள்..!