ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (19:29 IST)

அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி - பிரதமர் மோடி பெருமிதம்

PM Modi
அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் இன்று மாலை நாட்டு மக்களுக்கு  பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை  நாட்டு மக்களிடம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
 
அதன்படி அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
 மிஷன் திவ்யாஸ்த்ரா திட்டத்தின் கீழ் அங்கி 5 ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
 
பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு திரும்பி வரும் தொழில்நுட்பம் கொண்டதாக அக்னி 5 ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் 
 
உள்நாட்டிலேயே  உருவாக்கப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 
மேலும்,  இத்திட்டம் வெற்றி அடைந்ததன் மூலம் நமது விஞ்ஞானிகளின் சாதனை பெருமையளிக்கிறது என்று  குறிப்பிட்டுள்ளார்.