1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (21:03 IST)

தயவு கூர்ந்து இனிமேலாவது சிந்தியுங்கள்!திருந்துங்கள்!- தங்கர் பச்சான்

தனிப்பட்ட அரசியல் வளர்ச்சிக்காக மட்டுமே எப்பொழுதும் சிந்தித்து ஏதாவது சிக்கல்களை உருவாக்கி பிழைப்பு நடத்துபவர்கள் தயவு கூர்ந்து இனிமேலாவது சிந்தியுங்கள் என இயக்குனர் தங்கர் பச்சான் டுவீட் பதிவிட்டுள்ளார்.


தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் தங்கர் பச்சான். இவர்  இதுவரை அழகி, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி, களவாடிய பொழுதுகள் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவர், அவ்வப்போது தன் சமூக வலைதள பக்கத்தில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்.

அதன்படி, இவர் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், மக்களை முன்னேற்ற பாடுபடாமல் அவர்களின் வரிப்பணத்தில் பதவி சுகங்களை அனுபவித்துக் கொண்டு, தனிப்பட்ட அரசியல் வளர்ச்சிக்காக மட்டுமே எப்பொழுதும் சிந்தித்து ஏதாவது சிக்கல்களை உருவாக்கி பிழைப்பு நடத்துபவர்கள் தயவு கூர்ந்து இனிமேலாவது சிந்தியுங்கள்!திருந்துங்கள்! என்று பதிவிட்டுள்ளார்.

இதில், தமிழக அரசியல் பற்றி அவர் சுட்டிக் காட்டுவதாக ரசிகர்களும், நெட்டிசன் களும் ரீடுவீட் செய்து வருகின்றனர்.