வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (17:14 IST)

மொத்த தமிழ்நாட்டிலேயே தமிழில் நூற்றுக்கு நூறு! – சாதனை படைத்த மாணவி!

Exam results
இன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மொத்த தமிழ்நாட்டிலேயே தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார் 10ம் வகுப்பு மாணவி ஒருவர்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணிக்கும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 12 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகின.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பல மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். ஆனால் தமிழில் மொத்த தமிழகத்தில் ஒரு மாணவி மட்டும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

திருச்செந்தூர் ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த காவலர் மகளான துர்கா இந்த சாதனையை படைத்துள்ளார். விவசாயம் படிப்பதே தனது ஆசை என அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.