1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Photo by Drama This person should be arrested

திருமா பதிவிட்ட புகைப்படம்….இந்த நபரை கைது செய்ய வேண்டும் ஹெச்.ராஜா டுவீட்

விசிக
திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், டொனால்ட் ட்ரம்ப் சம்மன் இல்லாமலே ஆஜராகத் துடிக்கிறார்.பாகிஸ்தானோடு உரசல்,சீனாவோடு சிக்கல் வரும்போதெல்லாம் பஞ்சாயத்து பண்ண 'நான்ரெடி நீங்கரெடியா'என்கிறார்?அவர் மோடிக்குஆதரவாகப் பேசுகிறாரா?கிண்டல் பண்ணுகிறாரா?இந்திய-சீன எல்லையிலோ நம்படையினர் 'திரும்பிபோ'எனபதாகை பிடிக்கின்றனர்! என தெரிவித்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதற்கு ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : இந்த பதாகை போலியானது. மோடி அவர்கள் மீது உள்ள வன்மத்தால் இந்திய ராணுவத்தை அவமானம் செய்துள்ள இந்த நபரை அரசு உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 
 
அடுத்த கட்டுரையில்
இனவெறியால் ஒருவரை கழுத்து நெறித்து கொன்ற போலீஸ்காரர்