1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 28 மே 2020 (22:58 IST)

இனவெறியால் ஒருவரை கழுத்து நெறித்து கொன்ற போலீஸ்காரர்

இனவெறியால் ஒருவரை கழுத்து நெறித்து கொன்ற போலீஸ்காரர்
அமெரிக்க நாட்டில் கொரோனா தாண்டவம் ஆடிக் கொண்டுள்ளது. இந்நிலையில் இனவெறியால் கொலை நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க போலீஸ்காரர் ஒருவர் அந்த நாட்டில் வசித்து வந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை இனவெறி காரணமாக கழுத்து நெறித்துக் கொன்றதாகத் தெரிகிறது.

இதுகுறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இருந்த கறுப்பர் – வெள்ளையர் என்ற இனவெறி இன்னும் மறையவில்லை என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இதற்கு மக்கள் பெரும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.