1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (20:28 IST)

பிரபல நடிகர் கைது...மனைவி தற்கொலையில் போலீஸ் அதிரடி

மலையாள பட நடிகர் உன்னி பி.ராஜன் இன்று போலீஸாரல் கைது செய்யப்பட்டார்.

மலையாள நடிகர் உன்னி பி.ராஜன். இவரது மனைவி பிரியங்கா. நேற்று முன் தினம் இவரிடம் வரதட்சனை கேட்டு உன்னி பி.ராஜன் வீட்டில் கொடுமைப்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து பிரியங்கா வட்டப்பாரா போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து ஏற்கனவே பிரியங்காவின் குடும்பத்தினர் டிஜிட்டல் வடிவத்தை உன்னி பி.ராஜனுக்கு எதிராக புகாராக கொடுத்தனர்.

பின்னர் பிரியங்கா  தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். எனவே போலீசார் உன்னி பி.ராஜனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.