திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (11:51 IST)

மொத்தமாகக் குறைந்து படிப்படியாக ஏறும் பெட்ரோல் விலை!

தமிழநாட்டில் இன்று பெட்ரோல் 22 காசுகளும் டீசல் 31 காசுகளும் உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து 90 ரூபாயைத் நெருங்கி விற்கப்பட்டு மக்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கி வருகிறது. கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் பொருட்டு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பெட்ரோல், டீசல் விலையிலிருந்து லிட்டருக்கு ஒரு ரூபாயை மத்திய அரசு கலால் வரியிலிருந்து குறைத்துக் கொள்ளும் எனவும் எண்ணெய் நிறுவனங்களை அதன் உற்பத்தி செலவலிருந்து லிட்டருக்கு 1 ரூபாயைக் குறைத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. இதனால் மொத்தமாக பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாய் குறைந்துள்ளது. மேலும் மாநில அரசுகளையும் தங்கள் வரியைக் குறைத்துக் கொள்ள வலியுறுத்தினார்.

ஆனாலும் அதனால் மக்களுக்கு பெரிய அளவில் பலனில்லை என்ற சூழ்நிலையே நிலவி வருகிறது. மொத்தமாகக் குறைந்த 2.50 ரூபாய் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் பெட்ரோல் விலை 22 காசுகளும் டீசல் 31 காசுகளும் உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை 85.26 ரூ ஆகவும், டீசல் விலை 78.04ரூ ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இப்படியே உயர்ந்து கொண்டே போனால் பத்தே நாட்களில் பெட்ரோல் மீண்டும் பழைய விலைக்கே வந்துவிடும். அதனால் விலைக்குறைத்தும் பயனில்லை என வாகன ஓட்டிகள் தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளனர்.