1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 அக்டோபர் 2021 (07:32 IST)

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்றம் கண்டு இருந்தது என்பதும் பெட்ரோல் விலை 103 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் பார்த்தோம். 
இந்த நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
எண்ணெய் நிறுவனங்களின் இந்த அறிவிப்பு ஓரளவுக்கு நிம்மதியை தந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை 100 ரூபாயை கடந்து விட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உயர்ந்து விட்டதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.