1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold rate increses in Chennai

சரிந்த தங்கம் விலை மீண்டும் கூடியது: இன்றைய விலை நிலவரம்!!

தங்கம்
தங்கத்தின் விலை தொடர்சியாக இரண்டு நாட்கள் விலை குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. 
 
கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதிலும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வருகிறது. 
 
இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 144 உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 4,937 உள்ள நிலையில் சவரன்  ரூ. 39,496 விற்பனையாகிறது. 
 
மேலும், ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ. 69.90 விற்பனை ஆன நிலையில், 0.30 விலை உயர்ந்து இன்று ரூ. 71.20 விற்பனை செய்யப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
சென்னையில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவு… மகிழ்ச்சி செய்தி!