திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (07:43 IST)

தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல்-டீசல்: இன்றைய சென்னை விலை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காலத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசலின் விலை குறையாமல் இருந்தது மட்டுமின்றி அதிக வரிகள் காரணமாக அதிகரித்தும் வந்தது. இருப்பினும் கடந்த சில நாட்களாக பெட்ரோல்,டீசல் விலை குறைந்து காணப்படுவது பொதுமக்களுக்கு ஆறுதலான விஷயம் ஆகும்.
 
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 23 காசு குறைந்து ரூ.84.21-க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசு குறைந்து ரூ.77.40-க்கு விற்பனை ஆகிறது.
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அனைத்து பொருள்களின் விலை உயர்ந்து கொண்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைவதால் விலைவாசியும் குறையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்