1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rajnath Singh warns china for border occupied

இதோட எல்லாத்தையும் நிறுத்திக்கோங்க! – சீனாவுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

Rajnath Singh
எல்லையில் ஆக்கிரமிப்பு செயல்பாடுகளை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனா – இந்தியா ராணுவங்களுக்கு இடையே லடாக் எல்லைப்பகுதியில் கடந்த மாதம் நிகழ்ந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. போரை தவிர்க்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் சீனா இந்திய எல்லைக்குள் பல தூரம் ஆக்கிரமித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்கள் முன்பு பாங் சோ ஏரி அருகே ஊடுருவிய சீனப்படைகளை இந்திய ராணுவம் விரட்டியடித்தது.

தொடர்ந்து சீனாவின் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். எல்லையில் சீனா அத்துமீறல் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும், மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க தயங்காது என்றும் தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
காருக்குள் வைத்து கத்தி குத்து; பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!