1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 அக்டோபர் 2022 (08:07 IST)

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? சென்னை நிலவரம்!

petrol
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த போதிலும் இந்தியாவில் கடந்த 142 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று 143வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
ஓபெக் பிளஸ் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து இருந்தாலும் இந்தியாவில் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக பெட்ரோல் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva