வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Petrol
கடந்த 140 நாட்களுக்கும் மேலாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்.
 
ஒபெக் பிளஸ் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க போவதாக அறிவித்துள்ளதால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஆனால் இன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனை அடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
உக்ரைன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து ஏராளமான கச்சா எண்ணெய்களை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வாங்கி வைத்திருப்பதால் மற்ற நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் உயராது என்று கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva