1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 8 அக்டோபர் 2022 (10:58 IST)

இஷ்டத்துக்கு விலை சொன்ன ஓலா.. ஊபர்..! தடை விதித்த மாநில அரசு!

Taxi
ஆன்லைன் டாக்சி சேவை செயலிகளான ஓலா, ஊபர் உள்ளிட்டவை அதிகமான தொகை வசூலித்ததாக எழுந்த புகாரில் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் ஆன்லைன் டாக்சி, ஆட்டோ சேவை செயலிகளான ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில காலமாக இந்த ஆன்லைன் செயலிகள் மூலம் புக் செய்யப்படும் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் அதிகமான தொகை வாடகையாக வசூலிக்கப்படுவதாக தொடர் புகார்கள் இருந்து வருகிறது.


கர்நாடகாவில் ஆன்லைன் டாக்சி நிறுவனங்கள் கிலோ மீட்டருக்கு எவ்வளவு தொகை வசூலிக்க வேண்டும் என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த நிர்ணய விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்துள்ளது.

இதையடுத்து கர்நாடகாவில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட சேவைகளுக்கு போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. மூன்று நாட்களுக்கு கட்டண நிர்ணயம் குறித்த உரிய விளக்கம் அளிக்கவும், மாநில அரசின் கட்டண விதிமுறைகளுக்கு பொருந்தும் கட்டணத்தை நிர்ணயிக்கவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K