புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ஒரு மாதமாக மாற்றமில்லாமல் பெட்ரோல், டீசல் விலை!

petrol
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒவ்வொரு நாளும் 75 காசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
 
 இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110. 94 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.85 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் அதேபோல் வரியையும் குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்