1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (18:09 IST)

வெளிநாட்டில் கணவர்... இளம்பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த நபர் ? தர்ம அடி கொடுத்த மக்கள்...

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் ஒரு இளம் பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படும் இளைஞரை, அப்பகுதி மக்கள் அடித்து உதைத்து காவலர்களிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகேயுள்ள எல்.என்.எஸ் புரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் இப்பகுதியில் வசிக்கும் ரோஷன் பானுவின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
 
அதைப் பார்த்த ஊர்மக்கள், மணி, ரோஷன் பானுவிடம் தவறாக வைத்துள்ளதாகக் கூறி, அவரை அடித்து உதைத்துள்ளனர். பின்னர், அவரை போலீஸில் ஒப்படைத்தனர்.
 
அதனையடுத்து, ரோஷன் பானு, தாக்கப்பட்ட நபர் தனது கணவர் என்று ஏர்வாடி  காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், மணியை தாக்கிய 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஒருவரை கைது செய்தனர். 
 
இதற்கிடையில்,உள்ளூர் மக்கள், ரோஷன் பானுவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார் என்றும் மணி ரோஷனின் கணவரல்ல என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். து குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.