திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 13 ஏப்ரல் 2020 (18:44 IST)

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா , மொத்தம் 1173 பேர் பாதிப்பு - சுகாதாரத்துறை செயலாளர்

நாட்டில் கொரோனாவினால் இதுவரை 324 பேர் பலி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,352 ஆக அதிகரிப்பு என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075 லிருந்து  1173 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஷீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை  58 பேர் குணமடைந்துள்ளனர்.  தமிழகத்தில் 10 வயதுக்குட்பட்ட 31 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு எனவும், தமிழகத்தில் 65 லட்சம் முகக்கவசங்கள் கைவசம் உள்ளன ஓரிரு நாட்களில் ரேபிட் பரிசோதனை கருவிகள் தமிழகம் வந்தடையும்
   என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை 33850 பேர் வீட்டுக்காவலில் கண்காணிப்பட்டுள்ளனர், அரசு கண்காணிப்பில் 136 பேர் உள்ளனர். 28 நாட்கள் முடிவில் 633380 [ஏர் கண்காணிக்ப்படுள்ளனர். இதுவரை 12746 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.