செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 நவம்பர் 2021 (20:19 IST)

தமிழக அரசுக்கு நன்றி கூறிய சீமான்

தமிழக அரசின் பொங்கல் பரிசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார் சீமான்.

சமீபத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு 20 பொருட்கள் அடங்கிய துணிப்பை பரிசாக கொடுக்கவிருப்பதாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பலதரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில், பொங்கல் பண்டிக்கைக்கு   தமிழக அரசு 20 பொருட்கள் அடங்கிய துணிப்பை பரிசாக கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: பெரும் பொருளாதார நலிவு நிலையிலிருக்கும் ஈழச்சொந்தங்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில், பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்கு ஏதுவாகப் பொருட்களை வழங்குவதாகக் கூறியிருக்கும் தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதற்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்! எனத் தெரிவித்துள்ளார்.