திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 10 ஜூலை 2021 (10:48 IST)

லியோனி பதவியேற்பு விழா ரத்தா?

தமிழக பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி நியமிக்கப்பட்டது சர்ச்சைகளை உருவாக்கியது.

தமிழக பாடநூல் கழக தலைவராக ஆசிரியரும், பட்டிமன்ற பிரபலமுமான திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் அதேசமயம் பாமக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனமும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, இனி தமிழக பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு மாற்றாக “ஒன்றிய அரசு” என்ற சொல்லாடலே பயன்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் பதவியேற்க இருந்த நிலையில் அந்த பதவியேற்பு விழா நடக்கவில்லை. இது சம்மந்தமான முறையான காரணமும் சொல்லப்படவில்லை.