1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (11:47 IST)

திறப்பு விழாவுக்கு தயாராகும் மதுரை பெரியார் பேருந்து நிலையம்!

புனரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்ட மதுரை பெரியார் பேருந்து நிலையம் இப்போது திறப்பதற்கு தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜனவரி 28 ஆம் தேதி (நாளை ) முதல் மதுரைப் பெரியார் பேருந்து நிலையம் மூடபபட்டு உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கிழ் இந்தப் பேருந்து நிலையம் மேம்படுத்த இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இதனால் தற்காலிகமாக 9 இடங்களில் மதுரையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டன.

இதனால் மதுரையில் சில இடங்களில் கடுமையான போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டது. இந்நிலையில் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்தி கேயன், பணிகளை துரிதமாக முடிக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளார். அதனால் விரைவில் பேருந்து நிலையம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.