வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2018 (22:40 IST)

வளர்மதிக்கு பெரியார் விருது: நெட்டிசன்கள் கிண்டல்

தமிழக அரசின் 2017ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகளை வழங்கி வரும் நிலையில் 2017-ம் ஆண்டிற்கான  விருதுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று
அறிவித்துள்ளார்.

இதன்படி பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கே.ஜீவபாரதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வருகின்ற 16-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும்  நிகழ்ச்சியில் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த விருது பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழ் வழங்கப்படும்

இந்த விருது வளர்மதிக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். பெரியாரை இதைவிட கேவலப்படுத்தமுடியாது என்று நெட்டிசன்கள் செய்து வரும் கிண்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.