வியாழன், 1 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 ஜனவரி 2018 (13:03 IST)

வளர்மதி, கோகுல இந்திராவுக்கு பதவி: அதிமுக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக நியமனம்!

வளர்மதி, கோகுல இந்திராவுக்கு பதவி: அதிமுக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக நியமனம்!
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், எடப்பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் 12 பேரை அறிவித்துள்ளனர்.
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது அதிமுக சார்பில் யாரும் ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு பேச வேண்டாம், அதிகாராப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் யாரையும் இதுவரை நியமிக்கவில்லை என அறிவிப்பு வெளியானது.
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். அதில், அதிமுகவின் கொள்கைகள், தலைமைக் கழக முடிவுகள் உள்ளிட்டவற்றை ஊடகங்கள், செய்தி நிறுவனங்களுக்கு வழங்கும் செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
பேராசிரியர் தீரன், கே.சி.பழனிசாமி, பாபு முருகவேல், மகேஸ்வரி, ஜே.சி.டி.பிரபாகர், கோ.சமரசம், கோவை செல்வராஜ், மருது அழகுராஜ், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன் ஆகிய 12 பேர் இனி வரும் காலங்களில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.