1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 5 நவம்பர் 2017 (12:14 IST)

இது வருமான வரித்துறைக்காக ஸ்பெஷல் க்ளிக்; அமலாபாலை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்

நடிகை அமலாபால் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதுபோல தற்போது வெளியிட்டுள்ள செல்ஃபி புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து உள்ளனர்.


 

 
பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை நடிகைகள் அடிக்கடி தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டால் நெட்டிசன்கள் கலாய்த்து விடுகின்றனர். அமலாபால் தனது விவாகரத்து பின் தொடர்ந்து கவர்ச்சியான படங்களை வெளியிட்டு வந்தார். அதற்கு நெட்டிசன்கள் அவரை வறுத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துவிட்டு தனது பலத்தை காண்பிக்கும் வகையில் செல்ஃபி எடுத்து பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் அவரது உடையை பற்றி விமர்சனம் செய்துள்ளனர். சிலர் அவரை மேக்கப் இல்லாமல் பார்க்க முடியவில்லை என கேலி செய்துள்ளனர். 
 
அவர் புகைப்படத்துடன் தாகூர் கூறிய வாசகத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். அதற்கு சிலர் தாகூர் போன்ற மகானின் தத்துவத்தை நீங்கள் பயன்படுத்தாதீர்கள் என கூறியுள்ளனர். அவரது ரசிகர்கள் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
 
நாக்கை வெளிகாட்டியபடி உள்ள புகைப்படத்துக்கு, இது வருமான வரித்துறை பற்றி கேட்டபோது க்ளிக்கியது என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளனர்.