1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Modified: வியாழன், 6 மே 2021 (20:30 IST)

சுகாதாரத்துறைக்கு மா சுப்பிரமணியன்: மாஸ் செலக்சன் என பாராட்டு

சுகாதாரத்துறைக்கு மா சுப்பிரமணியன்: மாஸ் செலக்சன் என பாராட்டு
நேற்று தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியான நிலையில் அந்த அமைச்சரவையில் இருந்த பெயர்கள் பார்த்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் 
 
குறிப்பாக தற்போதைய கொரோனா நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதார அமைச்சர் தேவை என்று அனைவர் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மா சுப்பிரமணியம் அவர்கள் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் 
 
இவர் ஏற்கனவே சென்னை மாநகர மேயராக இருந்தபோது அதிரடி நடவடிக்கைகள் எடுத்து சென்னை மக்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்தார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது சுகாதாரத் துறைக்கு மிகச்சரியான அமைச்சர் இவர்தான் என்றும் இவர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவை தடுக்க நிச்சயம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் சுகாதாரத்துறைக்கு முக ஸ்டாலின் அவர்கள் மா சுப்பிரமணியன் அவர்கள் தேர்வு செய்தது மாஸ் செலக்சன் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் நல்ல நடவடிக்கை எடுத்து வந்தாலும் அவரை விட மா சுப்பிரமணியன் சிறப்பாக செயல்படுவார் என்று கூறப்பட்டு வருகிறது3