கொரோனா காலத்தில் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார்… சரத்குமார் வாழ்த்து!
கொரோனா பரவல் அதிகமாக உள்ள காலத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார் என சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத் தேர்தலில் 159 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள திமுக, நாளை ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவரின் எதிர்தரப்பாக இருந்த சரத்குமாரும் சென்று சந்தித்து வாழ்த்துகளைக் கூறியுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா பரவல் அதிகமாக உள்ள காலத்தில் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.