1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. perarivalan parole gets extended to a month further

பேரறிவாளனுக்கு பரோல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

perarivalan
அற்புதம் அம்மாள் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு பரோல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை ஒருவரான பேரறிவாளனுக்கு 30 நாட்கள் மருத்துவ விடுமுறை கிடைத்தது. அவரது தாயார் அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுமுறை அளிக்க உத்தரவிட்டார்.
 
எனவே கடந்த மே மாதம் 28 ஆம் தேதி புழல் சிறையிலிருந்து ஒருமாதகால பரோலில் விடுவிக்கப்பட்டு, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார் பேரறிவாளன். இந்நிலையில், பேரறிவாளனின் ஒருமாத பரோல் நிறைவடைந்து அவர் புழல் சிறைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில், அவரின் பரோல் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா பரவல் அதிகம் இருப்பதாலும், தனது மகன் பேரறிவாளனுக்கு ஏற்கனவே பல்வேறு உடல்நல பாதிப்புகள் இருப்பதாலும், அவரின் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று அற்புதம் அம்மாள் கோரிக்கையை ஏற்று பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
தீர்ந்து போன தடுப்பூச்கள்... மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்!