1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 ஜூன் 2021 (13:53 IST)

30 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்: பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்!

30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பேரறிவாளன் சிறை சென்றார் என்றும் அவரது விடுதலையை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை விவகாரத்தை குடியரசுத் தலைவரின் முடிவுக்குக் கொண்டு செல்வது, மாநில அரசின் உரிமைகளை தாரைவார்ப்பதாகும். விடுதலையை தாமதிக்கும் செயல். 2018 அமைச்சரவை பரிந்துரை மீது விரைந்து முடிவெடுக்க ஆளுநரை முதல்வர் ஸ்டால்லின்  நேரில் சந்தித்து விடுதலையை உறுதி செய்ய வேண்டும். 
 
அதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சிறை சென்ற மகன் பேரறிவாளன் விடுதலையாகி வீடு திரும்புவதைக் கண்டு அவரது வயது முதிர்ந்த தாயும், தந்தையும் மகிழ்ச்சியடைவதை உறுதி செய்ய வேண்டும்