வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 ஜூன் 2021 (13:27 IST)

தீர்ந்து போன தடுப்பூச்கள்... மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் 

 
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டு நிலவும் நிலையில், இன்று மாலை 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வரவுள்ளதாக தகவல் வெளியானது. தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் இன்று சென்னையில் தடுப்பூசி போடும் பணிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. 
 
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் அரசு மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு அதிக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.