1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tamil nadu will have sunny weather

இன்று முதல் 27 ஆம் தேதி வரை வறண்ட வானிலை!!

வானிலை
இன்று முதல் 27 ஆம் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக வடகிழக்கு பருவக்காற்றால் தொடர் மழை பெய்து வந்தது. மேலும் வங்க கடலில் தொடர்ந்து அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பல மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிந்தது.
 
கடந்த சில நாட்களாக புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகாத நிலையில் மிதமான அளவில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் முன்னதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. 
 
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வருகின்ற 28, 29 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை வெளியிட்ட தமிழக அரசு