திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 நவம்பர் 2023 (08:33 IST)

தீபாவளி பட்டாசுகளுக்கு பயந்து வீட்டுக்குள் பதுங்கிய சிறுத்தை! – நீலகிரியில் பரபரப்பு!

தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு பயந்து சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்த சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நேற்று நாடு முழுவதும் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பல பகுதிகளிலும் மக்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினர். அந்த சமயம் குடியிருப்பு பகுதிகளில் நடமாடிய சிறுத்தை ஒன்று பட்டாசு சத்தத்திற்கு அஞ்சி வீடு ஒன்றிற்குள் சென்று பதுங்கியுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சிசிடிவி கேமராக்கள், தானியங்கி கேமராவை பயன்படுத்தி சிறுத்தையின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை வீட்டிற்குள் பதுங்கி 15 மணி நேரம் ஆகியுள்ள நிலையில் விரைவில் சிறுத்தையை பிடித்து வனப்பகுதியில் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K