வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (08:23 IST)

#HBDதத்திஸ்டாலின்: பிறந்தநாள் அதுவுமா ஒரு மனுசன இப்படியா பேசுறது?

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #HBDதத்திஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 

 
திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இணையவாச்களோ அவரை கலாய்த்து வருகின்றனர். 
 
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #HBDதத்திஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் காலை முதலே டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. இந்த ஹேஷ்டேக்கின் கீழ் ஸ்டாலினை கலாய்த்து வருகின்றனர். 
 
இருப்பினும் ஸ்டாலின், இன்று தனது பிறந்தநாளை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர் பெரியார் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.