செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (11:45 IST)

மூன்றாவது முறையாக கொளத்தூரில் களம் இறங்கும் ஸ்டாலின் – விருப்ப மனு தாக்கல்

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக சார்பில் கொளத்தூரில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகல் கூட்டணி மற்றும் விருப்ப மனு பெறுதல் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவில் விருப்பமனுக்கள் பெற கடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு அளித்துள்ளார். முன்னதாக 2011,2016 தேர்தல்களிலும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்து வரும் நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.