திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Muugan
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2017 (09:39 IST)

கந்து வட்டி கொடுமை - குரல் கொடுத்த கமல்ஹாசன்

தலை விரித்தாடும் கந்து வட்டி கொடுமையை சட்டம் தடுத்து நிறுத்த வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.


 
சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக விஷால், அமீர், சுசீந்திரன் உள்பட பலர் குரல் கொடுத்து வருகின்றனர். 
 
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “ கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.