1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (07:06 IST)

மின்சாரம் தாக்கி இறந்த குரங்கிற்கு இறுதிச் சடங்கு செய்த பொதுமக்கள்

அனுமந்தபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கிற்கு ஊர் பொதுமக்கள் கூடி, அதற்கு இறுதிச் சடங்கு செய்து புதைத்தனர்.
தருமபுரி மாவட்டம் அனுமந்தபுரம் என்ற கிராமத்தில் குரங்குகள் கூட்டம் நேற்று ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்தது.  அந்த கூட்டத்தில் இருந்த குரங்கு ஒன்று அங்குள்ள மின்கம்பியில் ஏறி விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் குரங்கு உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.
 
இதனைக்கண்ட அந்த பகுதிமக்கள், குரங்கின் உடலை மீட்டு அதற்கு மாலை அணிவித்தும், பொட்டு வைத்தும் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் குரங்கின் உடலை அப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.