பிறந்து 28வது நாட்களே ஆன குழந்தை உட்பட 11 பேர் பலி - கேரளாவில் சோகம்
கேரளாவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் பிறந்து 28 நாட்களே ஆன குழந்தை உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
முக்கியமாக மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் தங்களது வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து முகாம்களில் தங்கி வருகின்றனர். கேரள மக்களுக்கு உதவும் வகையில், நாடெங்கும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால், ஒரு பகுதியில் உள்ள சில வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர் .அதில் பிறந்து 28வது நாட்களே ஆன குழந்தை இறந்துள்ளது மிகப்பெரிய சோகம்.
மீட்புத் துறையினர் இதுவரை 10 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
நேற்றைய தினம் வரை கனமழையின் காரணமாக 97 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், கேரள முதல்வர் தற்பொழுது பலி எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது என கூறியுள்ளார்.
மத்திய அரசு மேலும் பல ஹெலிகாப்டர்களையும், மீட்புத் துறையினரையும் மீட்புப் பணிகளுக்காக கேரளாவிற்கு அனுப்பியுள்ளது.