செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (07:44 IST)

குற்றாலத்தில் விடிய விடிய மழை: மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை!

courtralam
குற்றாலம் மற்றும் தென்காசி பகுதியில் நேற்று விடிய விடிய மழை பெய்ததன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் அதிக அளவு தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நேற்று இரவு விடிய விடிய குற்றாலம் தென்காசி பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மெயின் அருவிக்கு தண்ணீர் பெருக்கெடுத்து வருவதாகவும் இதனால் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தாலும் ஐந்தருவி உள்ளிட்ட மற்ற அருவியில் குளிப்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது