வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (07:29 IST)

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கும் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
வரும் 25-ஆம் தேதி அதிகாலை 4:45 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. ஆனால் 24ஆம் தேதி முதல் மாலை 6 மணி முதல் முதல் 25ஆம் தேதி காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சொர்க்கவாசல் திறக்கும் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது உறுதியாகி உள்ளது 
 
சொர்க்க வாசல் திறந்த பின்னர் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் சாமியை பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி ஒன்றாம் தேதி வேடுபறி உற்சவம் நடப்பதால் அன்றும் பகல் 12.30 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
இந்த ஆண்டு சொர்க்கவாசலை பார்ப்பதற்கு அனுமதி இல்லை என்ற தகவல் பக்தர்களுக்கு பெயர் அதிர்ச்சியை கொடுத்துள்ளது