ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:35 IST)

குவியும் ரசிகர் கூட்டம்... மருத்துவமனை வாசலில் திணறும் போலீஸார்!

ம்ஜிஎம் மருத்துவமனை வாசலில் ஊடக துறையினரும், பொதுமக்களும் குவிய துவங்கியுள்ளனர்.
 
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா உள்ளிட்ட ஒரு சில பிரச்சனைகளுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எஸ்பிபி உடல்நிலை நேற்று கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சரியாக இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்பிபி காலமானார்.
 
அவரது மறைவு திரையுலகினரையும் லட்சக்கணக்கான இசை ரசிகர்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கம் கொண்டு செல்லப்படும் அவர் உடல் நாளை மதியம் செங்குன்றத்தில் உள்ள அவரது வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
எஸ்பிபி கவலைக்கிடமாக இருப்பதான செய்தி வந்த நேற்றைய தினமே எம்ஜிஎம் மருத்துவமனை வாசலில் ஊடக துறையினரும், பொதுமக்களும் குவிய துவங்கினர். இன்று அவரது இறப்பு செய்தி வந்த பிறகு கூட்டம் மேலும் அதிகமாகியுள்ளது. காலை முதலே அங்கு போலீஸார் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.