திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (21:43 IST)

ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம எலெக்ட்ரானிக் பொருள்... போலீஸார் விசாரணை

புதுச்சேரியில் எஸ்.பி.ஐ ஏடிஎம் மையத்தில் மர்ம எலெக்ட்ரிக் பொருள் ஒன்று இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ளது லாஸ்பேட்டை. இங்குள்ள பெட்ரோல் பங்குக்கு எதிரில் உள்ள    எஸ்.பி.ஐ மையத்தில் இந்த மையத்தில்  மக்கள் பணம் எடுக்கச் சென்றபோது, உள்ளே ஒரு எலெக்ட்ரிக் பொருள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
 
பின் அதை ஒரு போட்டோ எடுத்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதையடுத்து,  எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் இருந்து சைபர் கிரைம் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.
 
தற்போது இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.