வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (20:45 IST)

கோவை சென்ற விமானத்தில் கோளாறு..பயணிகள் பரபரப்பு

கோப்புப்படம்

சென்னையிலிருந்து கோவை சென்ற பயணிகள் விமானம் ஒன்றில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகளிடம் பரபரப்பு நிலவியது.

இன்று காலை 06.15 மணி அளவில் 182 பேருடன் சென்னையிலிருந்து கோவைக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து உடனடியாக விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். பின்பு அவசரமாக சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் பிறகு 182 பேரையும் வேறு விமானத்தில் காலை 10 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.